கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு
கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நவம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுகவின் கனிமொழி வெற்றிக்கு எதிராக சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.ஆனால் இந்த வழக்கை நிராகரிக்கோரி கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.அதில், தூத்துக்குடி மக்களவை தொகுதி தேர்தல் வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும்என்று வழக்கு தொடர்ந்த சந்தானகுமார் மற்றும் கனிமொழி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.பின்னர் கனிமொழி வெற்றியை எதிர்த்து சந்தானகுமார் தொடர்ந்த தேர்தல் வழக்கு நவம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.