சயான், மனோஜ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.!

மனோஜ் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிறையிலுள்ள சயான், மனோஜ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். வழக்கில் தொடர்புடைய 4 சாட்சிகளை மிரட்டியுள்ளதால், ஜாமீன் தந்தால் மற்ற சாட்சிகளையும் மிரட்டக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
நீலகிரி நீதிமன்றத்தில் விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்க அவசியம் இல்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது. இதன் காரணமாக சயான், மனோஜ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.