ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் ஒத்திவைப்பு!
தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பி வாக்குப்பதிவு மையத்தை அடித்து உடைந்ததால் பரபரப்பு.
வழக்கறிஞர்கள் தகராறில் ஈடுபட்டதால் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கறிஞர் சங்க தேர்தலில் சுமார் 4,760 வழக்கறிஞர்கள் வாக்களிக்க இருந்தனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் ஏற்பட்ட தகராறால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது.
தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பி வாக்குப்பதிவு மையத்தை அடித்து உடைந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தலை நடத்த அலுவலராக மூத்த வழக்கறிஞர் கபீரை நியமித்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த நிலையில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.