ஆகஸ்ட் 10 ஆம் தேதி அறிவித்திருந்த முழு கடையடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு – விக்ரமராஜா அறிவிப்பு

கோயம்பேடு காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி வரும் 10 ஆம் தேதி அறிவித்திருந்த முழு கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா அறிவித்துள்ளார்.மேலும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருடன் அதிகாரிகள் பேசி முடிவு தெரிவிப்பதாக கூறியதை ஏற்று போராட்டம் ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளார்.