கொரோனாவால் தேர்தல் ஒத்திவைப்பா?- தலைமை அதிகாரி விளக்கம்
பீகாரில் 12 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த சூழலில் தேர்தல் நடைபெற்றது என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்.
தமிழகத்தில் கொரோனா பரவலால் சட்டப்பேரவை தேர்தலை ஒத்திவைப்பது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். பீகாரில் 12 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த சூழலில் தேர்தல் நடைபெற்றது என கூறியுள்ளார்.
பீகாரில் இருந்த போது தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர்களுக்கு நத்தம் விஸ்வநாதன் பணம் கொடுத்தது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க பீகார் மாநில சுகாதார அதிகாரிகள் சுதிர்குமார், ரோகிணி ஆகிய இருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் கொரோனாவுக்கு மத்தியில் தேர்தல் நடத்தியது எவ்வாறு என்று அம்மாநில அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரும் சூழலில், இந்த இரண்டு அதிகாரிகளை தலைமை அதிகாரி நியமித்துள்ளார். தேர்தல் பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் நாளை மாலை 4மணிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கோளிக்கிறார்.