கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி
ஜனவரி மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதாவது, ஜனவரி மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, மாணவர்களுக்கான விடுமுறைக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு மாணவர்களுக்கு study holiday விடப்படும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதை தொடர்ந்து எக்காரணத்தைக் கொண்டும் இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்படாது எனவும் அமைச்சர் தெரிவித்தாக கூறப்படுகிறது.