சுகாதாரத்துறை அறிக்கையின் அடிப்படையில் 12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு..?

Default Image

சுகாதாரத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் 12-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ்  காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே திறக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் காரணமாக சில பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் 9 முதல் 11-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மே 3-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்குவதால் 12-ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தேர்தல் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  வரும் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை மீண்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளி திறந்தவுடன் செய்முறைத் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் 12-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்