10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Default Image

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துகல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்  சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கான புதிய தேர்வு தேதிகள் மத்திய மனிதவள அமைச்சர் அறிவித்தார். 

இதனிடையே இன்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்,தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு  ஜூன் 1ம் தேதி முதல் 12-ஆம்  தேதி வரை பொது தேர்வு நடைபெறும் என்று அறிவித்தார். 

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளார் .கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதிப்படுத்திய பிறகு, தேர்வு நடத்துவதே சரியானது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை மனரீதியாக தயார் செய்தபின் தேதியை அறிவிப்பதே சரியானது.போக்குவரத்து வசதிக்கு உத்தரவாதம் இன்றி, தேர்வெழுத மாணவர்கள் எப்படி வருவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்