ஒபிஎஸ் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளி வைப்பு…!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கு ஆகஸ்ட்-9-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் 11,055 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்புமனுவில் விவரங்களை மறைத்துள்ளார். அவரது மனைவி விஜயலட்சுமி பெற்ற கடனுக்கு உத்தரவாதம் அளித்த சொத்தின் மதிப்பை ஓ.பன்னீர்செல்வம் குறைத்து கூறியுள்ளார். ஏனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த சொத்தின் மதிப்பு குறித்து காட்டப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 9 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.