பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதை தள்ளிப்போடுங்கள் – ரவிக்குமார் எம்.பி. ட்வீட்
தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நோய்க்கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 16-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு. ஆனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இது குறித்து ரவிக்குமார் எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதை தள்ளிப்போடுங்கள் கொரோனா பெருந்தொற்றின் அடுத்த அலை டெல்லி, கேரளா, மகராஷ்டிரா முதலான மாநிலங்களில் தாக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் முடிவைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதை தள்ளிப்போடுங்கள்
கொரோனா பெருந்தொற்றின் அடுத்த அலை டெல்லி, கேரளா, மகராஷ்டிரா முதலான மாநிலங்களில் தாக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் முடிவைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் pic.twitter.com/B4xzHSxJCp
— Dr Ravikumar M P (@WriterRavikumar) November 4, 2020