முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – கால அட்டவணையை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம்!

Default Image

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் கால அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

பிப். 12 முதல் 15 வரை 4 நாட்கள் நடைபெறும் 14 பாடங்களுக்கான முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை – 1/கணினி பயிற்றுநர்கள் நிலை 1- 2020-21 காலிப் பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து வரும் 12 முதல் 20-ஆம் தேதி வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டியிருந்தது.

வரும் 12 முதல் 15-ஆம் தேதி வரை நாட்களுக்குரிய கணினி வழித்தேர்வுக்கான கால அட்டவணை (Schedule) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு 1 மற்றும் அனுமதிச் சீட்டு 2 (Admit Card) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in -ல் தேர்வர்கள் தங்களது USER ID மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்வதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் பாடங்களுக்குரிய அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் கால அட்டவணை நிர்வாகக் காரணங்கள் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri
cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning