மேலும் 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்ட முதுகலை மருத்துவப்படிப்பு தேர்வு – மருத்துவ கல்வி இயக்குநர்

Default Image

மேலும் 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்ட முதுகலை மருத்துவப்படிப்பு தேர்வு.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது.

மேலும், சில பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ரத்து  செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதுகலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அனைத்து மருத்தவர்களும், கொரோனா தடுப்பு பணியில் மும்முரமாக இருப்பதால், ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi