அரியரை வென்ற அரசராக முதல்வரை புகழ்ந்து ஒட்டப்பட்ட போஸ்ட்ர்.! கவனத்தை ஈர்த்த மாஸ் வசனங்கள்.!

Default Image

திண்டுக்கல்லில் அரியர் எழுதிய மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று கூறியதை அடுத்து நன்றி தெரிவித்து ஒட்டிய போஸ்ட்ர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் கூறியதை அடுத்து மாணவ, மாணவர்கள் முதல்வருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், போஸ்ட்ர்கள் அடித்தும் பாராட்டு மழைகளை பொழிந்தும், நன்றியையும் தெரிவித்தும் வருகின்றனர்.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் ‘மாணவர்களின் பாகுபலியே, அரியரை வென்ற அரசனே’ என்ற போஸ்ட்ரை ஒட்டி முதல்வரை பாராட்டு நன்றியை தெரிவித்துள்ளனர். தற்போது மாணவர்களால் ஒட்டப்பட்ட அந்த போஸ்ட்ர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்