#BREAKING: தபால் வாக்கு..மார்ச் 16-க்குள் விண்ணப்பிக்கலாம்..!
வரும் 12-ம் தேதி முதல் 16ம் தேதி வரை தபால் வாக்கிற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளவர்கள் வரும் 12-ம் தேதி முதல் 16ம் தேதி வரை தபால் வாக்கிற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தபால் வாக்களிக்க விரும்புவோர் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் படிவம் 12Dஐ மார்ச் 16-க்குள் தரலாம். தபால் வாக்களிக்க விருப்பமில்லை எனில் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.
தபால் வாக்களிக்க தகுதியானவர்களின் பட்டியல் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.