தமிழ்நாட்டில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

Postal voting

Election2024: தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக வரும் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதனால் திமுக, அதிமுக, பாஜக என அனைத்து பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம் மக்களவை தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. அதன்படி, ஈரோடு மக்களவை தொகுதியில் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் 21,805 பேரும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 9,824 பேரும் உள்ளனர். இதில், 2,201 முதியவர்களும், 800 மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

விருப்பம் தெரிவித்த 3,001 பேரிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியை மாநில தேர்தல் அதிகாரிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் 6ம் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது. ஈரோட்டில் தபால் செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்