தேர்தல் ஆணையம் நடைமுறையை எதிர்த்து திமுக தொடர்ந்துள்ள அவசர வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனிகளும் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தபால் மூலம் வாக்களிப்போரின் பட்டியலை தொகுதிவாரியாக வழங்கக்கோரி திமுக முதன்மை செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தொகுதி வாரியாக தபால் வாக்காளர்கள் பட்டியலை மார்ச் 29ம் தேதி மாலை 6 மணிக்குள் அரசியல் கட்சிகளுக்கு சம்மந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தபால் வாக்கு செய்துவோரின் பட்டியல் வழங்கப்படாத நிலையில், இன்று முதல் தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் பெறத்தொடங்கி உள்ளதாக திமுக சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திமுகவின் அவசர வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…