வாக்கு எண்ணும் நாளில் தபால் வாக்குகள் எண்ணப்படவேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்
எந்த சூழலிலும் தபால் வாக்கு பெட்டிகளை மே 1ம் தேதி திறக்கக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக சார்பில் தேர்தல் அதிகாரியிடம் மனு.
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சார்பில் மனு அளித்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ம் தேதி தான் தபால் வாக்குகள் எண்ணப்படவேண்டும் என்றும் அதற்கு முன்பாக மே 1ம் தேதி எந்த சூழலிலும் ஸ்டார்ங் ரூம் திறக்க கூடாது என வலியுறுத்தி உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
சில மாவட்டங்களில் மே 1ல் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தபால் வாக்கு தொடர்பாக அதிமுக தலைமைக்கு கிடைத்த தகவலை தெரிவித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாக்கு எண்ணிக்கையில் மேஜைகளை குறைக்கக்கூடாது என்றும் கடந்த கால விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.