இவர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 காலை 8 வரை பெறப்படும் – சத்யபிரதா சாகு
தபால் வாக்குகள் மே 2 காலை 8 மணி வரை பெறப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்பேரில் தபால் வாக்களிக்க விரும்புபவர்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்து தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 அதாவது, தேர்தல் முடிவு வெளியிடப்படும் அந்த நாளில் காலை 8 மணி வரை பெறப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் ஏப்.5ம் தேதி வரை தபால் வாக்குகள் பெறப்படும் என்றும் 4.66 லட்சம் தபால் வாக்குகளில் இதுவரை 1.31 லட்சம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன எனவும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.