இனியசெய்தி: கொரோனாவில் இருந்து குணமடைந்த மூதாட்டி புகைப்படம் வெளியிடு.!

தமிழகத்தில் இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சற்று மணி நேரத்திற்கு முன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே கொரோனாவால் 690 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 738 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இன்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து தமிழகத்தில் உயிரிழப்பு 8 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று வரை 19 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்று மேலும் 2 பேர் வீடு திரும்பியதாக தெரிவித்தார்.
இன்று வீடு திரும்பிய இரண்டு பேரில் ஓருவர் 74 வயது மூதாட்டி.இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தற்போது முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார்.இவரின் புகைப்படத்தை ராஜீவ் காந்தி மருத்துவமனை வெளியிட்டுள்ளது.