கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது – ஜோதிமணி எம்.பி
லவர பாஜக, பொறுப்பற்ற முறையில், கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோவை கார் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து பாஜக தரப்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோவை ஒரு பெருமைக்குறிய தொழில் நகரம். மோடியின் மோசமான ஆட்சியில் தொழில்கள் சிதைந்து விட்டன.லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்.வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல,மதவெறி பிடித்த, கலவர பாஜக, பொறுப்பற்ற முறையில், கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொறுப்புமிகுந்த அரசு, குற்றவாளிகளை பிடிக்க விரைந்து செயல்பட்டுள்ளது. முறையான,விரைவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பாஜக மலிவான அரசியல் செய்வது அவமானகரமானது.
மோடி ,பாஜக ஆட்சியைப் போல சீனாவைக் கண்டு அஞ்சி நடுங்குகிற, தீவிரவாத குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்க்கிற ஆட்சி தமிழகத்தில் நடக்கவில்லை. பாஜகவின் கலவர அரசியலை மீறி தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாகவே இருக்கும்.
— Jothimani (@jothims) October 25, 2022