மாணவர்களின் புத்தகப்பைகளில் முன்னாள் முதலமைச்சர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி நலனை மேம்படுத்தும் வகையில் பாட புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த புத்தகப்பைகளில் முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த புத்தகப்பைகளில் முன்னாள் முதலமைச்சர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றிருப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா.ரோஸ்நிர்மலா தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்க மட்டுமே உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் புத்தக பைகள், குறிப்பேடுகள் போன்ற இதர உபகரணங்கள் வழங்க அனுமதி கிடையாது என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தகப்பை வழங்கப்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும், வழங்கப்பட்ட புத்தகப்பைகள் திரும்ப பெறப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…