வலி தாங்க முடியாமல் வாஸ்மால் குடித்தவர் பரிதாபமாக பலி
நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் நீலா. இவருக்கு சமீபத்தில் அவரது மார்புப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின் மூலம் அவருக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நீலா வலி தாங்க முடியாமல், வாஸ்மால் அருந்தியுள்ளார். இதனையடுத்து நிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.