ஜீரோ வரியில் ஏழைகள் பயனடையவில்லை என்று வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!
ஜீரோ வரியில் ஏழைகள் பயனடையவில்லை, கார்ப்பரேட் நிறுவனம், செல்வந்தர்கள் தான் பயனடைகின்றனர். வரி போடாமல் இருப்பது பணக்காரர்களுக்கு சாதகமானது என தெரிவித்தார். வரியே வசூலிக்காவிடில் எப்படி ஆட்சி நடத்த முடியும்? ஜீரோ வரி என்பது அர்த்தமற்ற நடைமுறையாக உள்ளது என குறிப்பிட்டார்.
சரியான வரியை சரியான நபர்களிடம் வசூலித்து வளர்ச்சி பாதையில் மாநிலத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மாநில வரி வருவாய் திமுக ஆட்சியில் 11.4% ஆக உயர்ந்தது. 2011-16ல் அதிமுக ஆட்சியில் 9% ஆக இருந்தது. 2016-21ல் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% சரிவை சந்தித்துள்ளது.
தமிழக அரசுக்கு வருமானம் மிகவும் சரிந்துவிட்டது. வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. இதுபோன்று தமிழகத்தில் மோட்டார் வாகனங்களுக்கான வரி கடந்த 15 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதால் குறைவாக உள்ளது. பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மோட்டார் வாகன வரி குறைவாக உள்ளது.
மேலும், கடந்த 2014க்கு பிறகு மின்சார கட்டணமும் உயர்த்தப்படாமல் இருக்கிறது. போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை, மின்சார பகிர்மான கழகத்தால் மட்டும் அரசாங்கத்தில் 2 லட்சம் கோடி கடன். போக்குவரத்துத் துறையில் பேருந்துகள் இயக்கப்படும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 59 ரூபாய் இயக்குவதற்கான செலவில் நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…