ஏழைகள் என்றால் அனைவரும் தானே; அது என்ன உயர்சாதி ஏழைகள்? மு.க.ஸ்டாலின் பேச்சு.!
உயர்ஜாதியினர் மட்டுமே படிக்கலாம் என்ற நிலையை, ஒன்றிய அரசு உருவாக்க நினைக்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று தொடங்கிய சமூகநீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, சமூகநீதியை காக்கும் கடமை நமக்கு உள்ளது. அதனால்தான் இந்த மாநாட்டில் நாம் இன்று இணைந்துள்ளோம்; புறக்கணிக்கப்பட்டோரை கைத்தூக்கி விடுவதுதான் சமூகநீதி என்று கூறியுள்ளார்.
மேலும் பொருளாதார ரீதியில் உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளித்து, ஒடுக்கப்பட்ட ஏழைகளை பாஜக அரசு புறக்கணிக்கிறது, இது அநீதியே ஆகும். ஏழைகள் என்றால் அனைவரும் ஏழைகள் தானே, அது என்ன ஏழைகளில் உயர்ஜாதி என்று முதல்வர் ஸ்டாலின் இந்த மாநாட்டில் பேசியுள்ளார்.