viral video: குடித்து கார் ஓட்டிய வழக்கறிஞரை விசாரித்ததால் போலீசாரிடம் தரக்குறைவாக வாக்குவாதம்..!

Default Image

போலீசாரை வழக்கறிஞர் தரக்குறைவாக பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

சென்னையில் நேற்று இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் தாறுமாறாக வந்த காரை நிறுத்தியுள்ளனர். கொண்டித்தோப்பு பத்மநாதன் பாயிண்ட் சாலையில் நடந்த இந்த சோதனையில் வழக்கறிஞர் காரை ஓட்டி வந்துள்ளார். கார் தாறுமாறாக வருவதை பார்த்து வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காரை இயக்கியவர் குடித்து விட்டு வந்துள்ளார்.

மேலும், முகக்கவசம் அணியாமல் காரை இயக்கியுள்ளார். இதனால் காரை பறிமுதல் செய்து அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் பிறகு, காரை ஓட்டிய வழக்கறிஞர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நான் ஒரு வழக்கறிஞர் என் மீது வழக்கு பதிவு செய்வீர்களா? என்று கேட்டுள்ளார்.

போலீசார், வழக்கறிஞராக இருந்தாலும் முகக்கவசம் இன்றி வருவது தவறு என்பதை எடுத்துரைத்துள்ளார். இதனால் அந்த போலீசாரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியிருக்கிறார் காரை ஓட்டி வந்த வழக்கறிஞர். மேலும், இவர் விசிக வழக்கறிஞர் விசுவநாதன் என்பது தெரியப்பட்டுள்ளது. இவருடைய வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்