பொன்னமராவதி கலவரம் : 1000 பேர் மீது வழக்குப்பதிவு ,டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

Default Image

பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தினர் பற்றிய அவதூறு வாட்ஸ்அப் ஆடியோவால் பொன்னமராவதியில் கலவரம் ஏற்பட்டது. அவதூறு வாட்ஸ்அப் ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று போராட்டம் நடந்தது. போராட்டத்தின்போது பொன்னமராவதி காவல்நிலையம், போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டது.

இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்  இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ்.மூன்று நாட்களுக்குப் பிறகு சூழ்நிலையைப் பொருத்து 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related image

இந்நிலையில்  பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல்  பிரச்னை ஏற்பட்ட பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை நிறுத்தபட்டுள்ளது.கற்கள் வீசி தாக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் 75 சதவிகித நகரப்பேருந்துகள் இயக்கப்படவில்லை.அதேபோல்  பிரச்னை தொடராமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்