பொன்னமராவதி வாட்ஸ் அப் வீடியோ விவகாரம் : 4 பேர் மீது குண்டர் சட்டம்

Default Image

பொன்னமராவதியில் ஒரு சமூகம் பற்றி பேசி சர்ச்சை ஆடியோ வெளியிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு சமூகத்தினர் பற்றிய அவதூறு வாட்ஸ்அப் ஆடியோவால்  கலவரம் ஏற்பட்டது. அவதூறு வாட்ஸ்அப் ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடந்தது. போராட்டத்தின்போது பொன்னமராவதி காவல்நிலையம், போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டது.

இந்நிலையில்  ஆடியோ வெளியிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.  செல்வக்குமார், வசந்த், சத்தியராஜ், ரெங்கையா ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க எஸ்.பி. பரிந்துரையின் பேரில் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்