பொன்முடி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிம வள அமைச்சராக இருந்தார். அப்பொழுது ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீதிபதி சுந்தரமூர்த்தி இந்த வழக்கில் பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருவரையும் விடுதலை செய்தார். இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
செந்தில் பாலாஜி ஜாமீன்… அமலாக்கத்துறைக்கு அதிரடி உத்தரவு..!
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது. கடந்த நவம்பர் 27-ம் தேதி இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். பின்னர், நடந்த அந்த மனு மீதான விசாரணையில் பொன்முடியும், அவரது மனைவியும் சொத்து குவித்து வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியது.
இதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் நேரடியாகவோ, காணொலி மூலமாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அன்று இருவரும் நேரில் ஆஜரான நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும், நீதிபதி 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைப்பதாகவும், 30 நாட்களுக்கு மேல் அவகாசம் தேவைப்பட்டால் 30 நாட்கள் நெருங்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவித்தார். இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தண்டனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…