உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பணிந்தார் ஆளுநர்.. இன்று அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடி!
Ponmudi :தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து மீண்டும் அமைச்சராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் பொன்முடி. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
Read More – நீங்கள் முடிவு எடுக்கலனா நாங்கள் எடுக்க நேரிடும்.. ஆளுநர் ரவிக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!
இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் நடைபெற்றது. அப்போது, தமிழக ஆளுநரின் செயல்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி, சரமாரியாக கேள்வி கண்டங்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது, தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. குற்றவாளி தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டால், அந்த நபர் குற்றவாளி இல்லையென்றே அர்த்தம்.
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மாநில முதல்வர் கூறினால் அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று ஆளுநர் கூற முடியும் என கேள்வி எழுப்பி தலைமை நீதிபதி, பொன்முடி விவகாரத்தில் முடிவெடுக்க இன்று வரை ஆளுநருக்கு அவகாசம் வழங்குகிறோம். அதன்படி, இன்றுக்குள் பொன்முடி விவகாரத்தில் சாதகமான முடிவு எடுக்காவிட்டால் ஆளுநருக்கு உச்சநீதிமன்றமே உத்தரவிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
Read More – பெண்களுக்கு மாதம் ரூ.3,000… தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அதிமுக!
இந்த நிலையில், இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் 24 மணிநேரம் கெடு விதித்திருந்த நிலையில், மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அமைச்சராக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்துள்ளதாக ஆளுநர் தெரிவித்ததை அடுத்து, அவருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.