மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி!

Published by
பாலா கலியமூர்த்தி

Ponmudi: சென்னை கிண்டியில் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி.  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அமைச்சராக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி ஆளுநர் ரவிக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருந்தார்.

Read More – விருதுநகரில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்.. தேமுதிக வேட்பாளர் லிஸ்ட்….

ஆனால், ஆளுநர் இதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையில், ஆளுநரின் செயல்பாட்டுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்தது.

Read More – பாஜக வேட்பாளராக ராதிகா, ஜான் பாண்டியன்.. வெளியான அடுத்த லிஸ்ட்…

அதுமட்டுமில்லாமல், பொன்முடி விவகாரத்தில் இன்றைக்கும் முடிவெடுக்க ஆளுநருக்கு கெடு வைக்கப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சரை பதவி பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்துள்ளதாக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

இதனால், தமிழக அரசு தொடர்ந்தை வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனிடையே, இன்று அமைச்சராக பதவியேற்க உள்ள பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை செய்து தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி.

Read More – மீண்டும் உயர்கல்வித்துறை.. அவசர அவசரமாக அமைச்சராகும் பொன்முடி.?

ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் முன்னிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர். மேலும், அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியம் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

Recent Posts

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

51 minutes ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

4 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

6 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

6 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

7 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

7 hours ago