நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த மத்திய அரசை வலியுறுத்திய அமைச்சர் பொன்முடி..!
மாநில அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் மட்டும் மாநில அளவில் தேர்வு நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத்தேர்வுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இன்று மத்திய கல்வி அமைச்சகத்துடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியஉயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்மருத்துவ கல்லூரிகளில் மட்டும் நீட் தேர்வு நடத்தவும், மாநில அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் மட்டும் மாநில அளவில் தேர்வு நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது என தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் தெரிவித்தோம் என தெரிவித்தார்.