திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது.! தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்.!
Ponmudi case – முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பொன்முடி , கடந்த முறை திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வழக்கு பதியப்பட்டு அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Read More – பாஜக ஆளும் மாநிலங்களில் தான் போதைப்பொருள் நடமாட்டம்… அமைச்சர் ரகுபதி விளக்கம்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திய வண்ணம் இருந்தன.
Read More – போதைப்பொருள் கடத்தல் விவகாரம்… விசிக நிர்வாகியை நீக்கிய கட்சி தலைமை!
இந்நிலையில் தான் தற்போது தமிழக சட்டப்பேரவை செயலாளர் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து வரும் மக்களவை தேர்தலோடு திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More – ஓ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு..! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு
முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து கன்னியாகுமரி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதாரணி பாஜகவில் சேர்ந்ததால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியிலும் இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் போது விளவங்கோடு மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.