பொன்முடி வழக்கு – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

ponmudi

சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இடைக்காலமாக நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. கடந்த 2006 – 2011ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016ம் ஆண்டு பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து உத்தரவிட்டது.  இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பும் வெளியான நிலையில், அதில் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், உச்சநீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம் என நீதிபதி அறிவுறுத்திய நிலையில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டது.

பாஜகவோடு ஒட்டுமில்லை.. உறவுமில்லை.! அதிமுக திட்டவட்டம்.!

இருப்பினும், அமைச்சர் பொன்முடி எம்எல்ஏவாக பதவி வைக்கும் தகுதியை இழந்தார். இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, பொன்முடி தொடர்ந்த மேல்முறையீடு மனுவுக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இடைக்காலமாக நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அதாவது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்த பின்பு அதுகுறித்து பார்க்கலாம் எனவும் நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்