தமிழக மக்களுக்கு ராகுல் பொங்கல் வாழ்த்து

- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்….களைகட்டிய ஜல்லிக்கட்டு ஆட்டம்..என உற்சாகம்
- பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு, ராகுல் காந்தி பொங்கல் வாழ்த்து
தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் இன்று தமிழர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.ஜல்லிகட்டும் களைக்கட்டி காளைகளும் வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வருகின்றது.சீறிப்பாயும் காளைகளை அடக்க இளங்காளைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் பொங்கலைக் கொண்டாடும் தமிழக மக்களுக்கு தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அகில இந்திய காங்.,முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்தினை தெரிவித்து உள்ளார்.