பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், நெல்லை, தூத்துக்குடி, மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஞாயிறு, செவ்வாய் கிழமையில் (ஜன. 14, 16) தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கபடுகிறது. வியாழன், சனி, செவ்வாய்கிழமைகளில் (ஜன. 11,13,16) தாம்பரத்தில் இருந்து மதுரை, தென்காசி வழியாக நெல்லைக்கு சிறப்பு முன்பதிவு ரயில் இயக்கபடுகிறது .
அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை – சிஐடியு சவுந்தரராஜன்
மேலும், வெள்ளி, ஞாயிறு, புதன் (ஜன. 12, 14, 17) ஆகிய நாட்களில் நெல்லையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது. இதற்கிடையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி 11,006 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயங்கும். மாநிலம் முழுவதும் 19,484 பேருந்துகள் இயக்கப்படுகிறது.