ஜன.3 முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் – தமிழ்நாடு அரசு
ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
வரும் 2022-ஆம் ஆண்டு தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் பச்சரிசி, முந்திரி திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜனவரி 3ம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை ஒருங்கிணைந்து திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.