சென்னை:பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில்,உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகம் முழுவதும்,பொங்கலை முன்னிட்டு அரிசி,வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு ரூ.1,297 கோடி மதிப்பில் 95 சதவிகித குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.இருப்பினும்,இந்த பொங்கல் தொகுப்பு தரமற்றதாக வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து,பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில்,இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் முறைகேடுகள் எதுவும் நடந்திருப்பின்,இது தொடர்பாக கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…