தமிழர் திருவிழாவாக உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் திருவிழா பொங்கல் திருவிழாதான். இந்த பண்டிகை விவசாயத்திற்கு உதவி புரியும் இயற்கைக்கும், கால்நடை உயிரின்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழா சங்ககாலத்திலிருந்தே இந்திர விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது விவசாயத்திற்கு மும்மாரி மழை பொழிய வேண்டும் என மழை கடவுளாக பார்க்கப்படும் இந்திரனை வணங்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இந்த இந்திர விழா 28 நாட்கள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
அதன் பிறகு மழை பொழிய, அறுவடை செய்ய, விவசாயம் செழிக்க சூரியன் மிக முக்கியம் என்பதை உணர்ந்த பிறகுதான் இயற்கை சூரியனை வணங்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் மார்கழி கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் வீட்டை சுத்தம் செய்து, பழைய பொருட்களை கழித்துவிடும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்கடுத்த நாள் தான் தை முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்டுகிறது. இந்நாளில் இயற்கைக்கு முக்கியமாக சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக சர்க்கரை பொங்கல் வைத்து இயற்கைக்கு படைப்பார்கள். சூரியனுக்கு நன்றி செலுத்துவார்கள்.
அடுத்த நாள் மாட்டு பொங்கல், அன்றைய நாளில் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பொங்கல் வைத்து அதனை கால்நடைகளுக்கு படைப்பார்கள்.
அடுத்த நாள், காணும் பொங்கல். இன்றைய நாளில் உறவினர் வீட்டிற்க்கு சென்று அவர்களுடன் சந்தோஷத்தை பகிர்ந்து உறவுகளை வளர்க்கும் நாளாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோர் இந்நாளில் குடும்பத்தாருடன் வெளியூர் அல்லது வெளியிடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…