தமிழ்நாட்டில் நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக 19, 484 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது.
இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னையில் இருந்து மட்டும் சுமார் 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகள் மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம், கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும், மாநிலம் முழுவதும் 19,484 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், பொங்கல் விடுமுறைக்குப் பின் 17,589 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, மயிலாடுதுறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் முடிந்து ஊர் திரும்ப 17,589 சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறதாம்.