pongal parisu [file image]
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் எனவும், விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும் எனவும் இவற்றை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் -முதல்வர் அறிவிப்பு..!
யார் யாருக்கெல்லாம் ரூ.1000 கிடையாது?
அதவாது, பொங்கலுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் மத்திய, மாநில அரசு பணியாளர்களுக்கு கிடையாது.
வருமான வரி செலுத்துபவர்களுக்கு கிடையாது.
பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு கிடையாது.
சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 கிடையாது.
பொங்கல் பரிசுத்தொகை மற்றும் உரிமை தொகை
தற்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்ததோடு, பொங்கலுக்கு முன்னதாக அதாவது ஜனவரி 10-ம் தேதிக்குள் மகளிர் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வழக்கமாக 15ஆம் தேதி அனுப்பப்படும், மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் பொங்கலை முன்னிட்டு 10-ம் தேதி அன்று வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…