பொங்கல் பரிசு – ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை!

tn ration shop

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, 2024 பொங்கல் பரிசு வழங்கிய சிறப்பு பணிக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 பைசா கணக்கிடப்பட்டு வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகை ரேஷன் கடை பணியாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த ஜனவரி 8ம் தேதி முதல் நியாயவிலை கடை ஊழியர்கள், ஒவ்வொரு வீடு வீடாக சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன்களை வழங்கினர். அதன்படி, ஜனவரி 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளின் வாயிலாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

எப்போதும் போல இம்முறையும் திமுக தேர்தல் அறிக்கை… கனிமொழி எம்பி பேட்டி!

இதன் பின்னர், ஜனவரி 13 மற்றும் 14ம் தேதிகளில் டோக்கன் பெறாதவர்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணமாக வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அண்மையில் மிக்ஜாம் புயலால் பாதிப்பு ஏற்பட்டபோது நிவாரணம் வழங்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டனர்.

எனவே. பொங்கல் பரிசு மற்றும் நிவாரணம் பணியில் நியாயவிலை கடை ஊழியர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.  இந்த நிலையில், தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம், அவர்கள் 3 நாட்களாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்து, அவர்களுக்கு ஊக்கத்தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்