காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புப்படையினர் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, சிறைத்துறை சீர்திருத்த துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு காவல் துறையில்( ஆண் /பெண்) காவலர் நிலை-1, தலைமை காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலையில் மூவாயிரம் பணியாளர்களுக்கு தமிழக “முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர் ஓட்டுநர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும் , சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் (ஆண்-பெண்) முதல் நிலை வார்டர்கள் மற்றும் இரண்டாம் நிலை வார்டர் நிலைகளில் 60 நபர்களுக்கும் தமிழக “முதலமைச்சரின் சிறப்புப் பணிப்பதக்கங்கள்” வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலை வேறுபாடு இன்றி மாதாந்திர பதக்கப்படி ரூ. 400 வருகின்ற 11ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…