தை திருநாளுக்கான தமிழ்நாடு அரசின் பொங்கள் பரிசு வழங்கும் பணி நிறைவு.. அமைச்சர் தகவல்..
- தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு தமிழ் மக்களும் சிறப்போடு கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
- இந்த பணி தற்போது நிறைவை எட்டியுள்ளதாக அமைச்சர் தகவல்.
இதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் , ரூபாய் .1,000 ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான இந்ததிட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் நவம்பர் 29-ந் தேதி துவங்கிவைத்தார்.
இந்நிலையில், நியாய விலை கடைகளில் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசு தொகுப்பை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பு 94.71 சதவீதம் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.