ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் பண்டிகைகளில் முக்கியமான ஓன்று என்றால் அது பொங்கல் பண்டிகை தான் . பொங்கல் என்றாலே அதற்காக செய்யப்படும் முன்னேற்பாடுகள் தான். பொங்கலுக்கு சிறப்பு என்றால் அது கரும்பும் வாழையும்தான். பொங்கலுக்கு இரண்டு நாளுக்கு முன்பே அனைவரும் வீடுகளில் ‘கொடாப்பு’ போடுவார்கள். கொடாப்பு என்பது வாழைத்தாரை (வாழைப் பழம்) பழுக்க வைப்பதுதான்.முந்தைய காலத்தில் ஏன் இன்னும் பல கிராமங்களில் வீட்டிலே வாழை மரம் உண்டு என்பதால். வாழைத் தாரை யாரும் கடையில் வாங்குவதில்லை.
கடையில் வாங்கிய வாழைத்தாரை தரையில் பள்ளம் தோண்டி, சுற்றிலும் வாழை சருகைக் (காய்ந்த வாழை இலை) வைத்து, அதில் நடுவில் வாழைக்காயை வைத்து, மேலே வாழைச் சருகை பரப்பி, ஒரு பானையை கவிழ்த்தாற்போல் வைத்து மண்ணை கொண்டு மூடி மொழுகி விடுவார்கள். இப்போது மண் பாணையின் சிறு பகுதி மட்டும் வெளியில் தெரியும். அதில் ஒரு ஓட்டையைப் போட்டு நெறுப்பு வைத்து காலையிலும், மாலையிலும் ஊதுவார்கள். அந்த மண் பாணை முழுவதும் வாழைச் சருகு இருக்கும். அதனால் நெறுப்புக் கொண்டு ஊத..ஊத புகை உள்ளே பரவி காயை பழுக்கவைக்கும். இரண்டு நாள் கழித்து கொடாப்பை பிரித்தால் வாழைக்காய் செங்காயாக பழுத்து இருக்கும். எடுத்து கொடியில் அடுக்கி விட்டால் பொங்கல் அன்று காலையில் பழம் பழுத்து விடும். பொங்கலுக்கு எல்லோர் வீட்டிலும் வாழை பழம் கிடைக்கும்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…
திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்து…
ஒடிசா : வருகின்ற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட…