ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதில், 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
எனவே உள்ளாட்சி தேர்தல் காரணமாக பொங்கல் பரிசு வழங்கப் படவில்லை.தமிழகத்தில் ஜனவரி 9 முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்தது.மேலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரூ.1000 ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உள்ள நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்று அதற்கு பதிலாக 16ஆம் தேதி விடுமுறை வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…