இந்த மாவட்டங்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கத் தடை.!

- பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.
- தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த நவம்பா் 29-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.
தமிழகத்தில் 2.05 கோடி அரிசி வாங்கும் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும் , பச்சரிசி, சா்க்கரை, போன்றவை இலவசமாக வழங்கப்படும் எனத் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளதால் பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது 27 மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு கொடுக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 27 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என தமிழக அரசுகூறி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025