பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் ரொக்கப்பணம் வழங்குவது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்.
கடந்த பொங்கலின்போது நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும், இந்த பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதன் காரணமாக இந்த முறை ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.
அந்தவகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பை வழங்குவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் சமீபத்தில், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000 ரூபாயுடன், என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
குறிப்பாக, பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் பொருட்களாக வழங்கலாமா? அல்லது பணம் வழங்கலாமா? என்பதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. எனவே, பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் ரூ.1,000 ரொக்கம் வழங்குவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கப்பணம் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா: ஹாலிவுட் திரையுலகில் 'ஓப்பன்ஹெய்மர்' உள்பட பல ஹாலிவுட் படங்களை இயக்கிய இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், அடுத்ததாக ஹோமரின் காவியக்…
டெல்லி : சில ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு சந்தைக்கு வரும் முன்னர் வரையில்,…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4ம் தேதி அன்று 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான நேற்று எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில்,…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
பலரும் விரும்பி சாப்பிட்டு வரும் சீதாப்பழத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :…