பொங்கல் பரிசு விநியோகம்: ஆட்சியர்களே பொறுப்பு – தமிழக அரசு
பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் பணம் விநியோகம் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு.
பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்பை உரிய முறையில் விநியோகம் செய்ய வேண்டிய பொறுப்பும் ஆட்சியர்களே சாரும்.
ஜனவரி 9-ஆம் தேதிக்கு பின் அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்க வேண்டும். பொங்கல் பரிசு பொருட்களை வழங்க வசதியாக வரும் 13-ஆம் தேதி வரை (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பச்சரிசு, சக்கரை உரிய தரத்துடன் இருப்பதை நுகர்வோர் வாணிபக்கழக அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பரிசு பொருட்களின் தரம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.’
பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சக்கரை இத்துடன் சேர்த்து முழு கரும்பும் வழங்கப்பட உள்ளது. மேலும், பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்குவதற்கான டோக்கனை வரும் 3-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை விநியோகிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.