ஓட்டு போட்டுவிட்டு பொங்கல் பரிசு வாங்கலாம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
- 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
- ஓட்டு போட்டுவிட்டு பொங்கல் பரிசு வாங்கிக் கொள்ளலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதில், 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் அளித்த தகவலில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டது என்று தெரிவித்தது.
இந்நிலையில் இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், இந்த ஆண்டு ரூ.1000 வழங்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.இதனால் பொங்கல் பரிசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டிருக்கலாம். ஆனால் இப்போது ஓட்டு போட்டுவிட்டு பொங்கல் பரிசு வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.