பொங்கல் தொகுப்பு! ஏதேனும் முறைகேடு நடந்தால் இந்த எண்ணில் தெரிவிக்கலாம் – அமைச்சர் அறிவிப்பு

Default Image

பொங்கல் தொகுப்பில் ஏதேனும் தவறு அல்லது முறைகேடு குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்ணை வெளியிட்ட அமைச்சர் சக்கரபாணி.

தமிழர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

டோக்கன் அடிப்படையில் ரேஷன் கடைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஒருசில ரேஷன் கடைகளில், துணிப்பை பற்றாக்குறை காரணமாக துணிப்பையின்றி பொருட்கள் மட்டுமே வழங்கபடுக்காத புகார் எழுந்த நிலையில், பைகள் இன்றி பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறும் பயனாளிகள், பின்னர் பிற பொது விநியோகத் திட்டப் பொருள்களை வாங்க வரும்போது பைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகத்தின்போது, இதுதொடர்பாக ஏதேனும் தவறு அல்லது முறைகேடு நடந்தால் 180059935430 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். மேலும், புகார்களை ஆய்வு செய்து, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்